ஒரு Tweet... 2,475+ மாணவர்களின் வாழ்வில் ஒரு மாற்றம்!

வணக்கம் 🙏

கல்வி மரம் அறக்கட்டளை, கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நோக்கில் 2020 ஜனவரி 1ல் தொடங்கப்பட்டது.

ஆனால்… 2022 டிசம்பரில் ஒரு நாள் ட்விட்டரில் டாக்டர் ஆனந்த் அவர்களின் ஒரு ட்வீட் எங்களின் நோக்கத்தை மாற்றியது.

அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி, கழிவறை சுத்தமா இல்ல, தண்ணீர் குடிக்காத காரணத்தால், சிறுநீரக தொற்றால் உயிருக்கு போராடியதை பற்றிய அந்த ஒரு பதிவு, என் மனதை பதற வைத்தது.


நானும் ஒரு அரசுப் பள்ளி மாணவன்தான் – இந்த சூழ்நிலையை நன்கு அறிந்தவன். ஆனால் இன்றும் அதே நிலை தொடருகிறதா என்பதற்கான பதிலை நேரில் சென்று பார்க்க முடிவு செய்தேன்.

அருகிலுள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் சென்று பார்த்த போது,
➡️ நாற்றம் வீசும் கழிப்பிடங்கள்
➡️ சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி
எல்லாம் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.
அந்த நாற்றத்துக்குள் தாறுமாறாக ஓடி செல்லும் குழந்தைகளைப் பார்த்த போது… நம் சமூகத்தின் உண்மை நிலை வெறுப்பாகவும், வேதனையாகவும் இருந்தது.

அந்த இரவு தூக்கம் வரவில்லை.

அரசு தரப்பில் RO குடிநீர் சுத்திகரிப்புக்கு முன்னெடுப்போ, நிதியுதவியோ இல்லை. மாதாந்திர கழிப்பறை பராமரிப்பு நிதியுதவியோ மிக மிக குறைவு.போதுமானதாக இல்லை.


என்ன செய்யலாம்?

அந்த கேள்வியே “நலமுடன் நமது பள்ளி” திட்டத்தின் பிறப்பாய் மாறியது.
நண்பர்களுடன் பேசி, கல்வி மரம் அறக்கட்டளையின் மூலம் இந்தப் பிரச்சனையை நம்மால் முடிந்த வரையில் தீர்க்க முடிவு செய்தோம்.

✅ 3 பள்ளிகளில் "நலம்" சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆரோக்கியமான குடிநீர் பெற RO Purifier System
✅ சுத்தமான கழிப்பிடங்கள் பராமரிக்க sanitation kit மற்றும் High Pressure Water jet Cleaning Machine வழங்கினோம்.





இன்று, அந்த ஒரு சிறு முயற்சி

➡️ 15 அரசுப் பள்ளிகளுக்கு விரிவடைந்துள்ளது
➡️ மொத்தம் 2,475 மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள்.

🌱 ஒரு சிறிய உதவி, பல நூறு குழுந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை தரும்.

இன்னும் பல பள்ளிகளில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் தேவை உள்ளது.

நீங்களும் இதில் பங்கேற்கலாம். வாருங்கள், புதியதோர் உலகம் செய்வோம் !

📩 தொடர்புக்கு: 735 735 4545 (WhatsApp) / www.kalvimaram.org

#கல்விமரம் #நலமுடன்நமதுபள்ளி #2475Students #CleanSchools #SafeWaterForAll

Post a Comment

0 Comments