சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறைகள் ஒரு மாணவனின் அடிப்படை உரிமைகள். ஆனால், அரசுப் பள்ளிகளில், குறிப்பாக கிராமப்புறங்களில், இந்த அடிப்படை தேவைகள், முழுமையான தீர்வு காணப்படாமல் உள்ளது.
🚽 கழிப்பறை சுகாதாரம்:
தமிழ்நாட்டில் பள்ளி வகைப்படி ஒதுக்கப்படும் மாதாந்திர கழிப்பறை பராமரிப்பு நிதி:
- தொடக்கப்பள்ளி (Primary): ₹300
- நடுநிலைப்பள்ளி (Middle): ₹500
- உயர் நிலை பள்ளி (High): ₹750
- உயர்நிலைப்பள்ளி (Hr. Sec): ₹1,000
📌 கழிப்பறை பணியாளர்களுக்கான மாத சம்பளம்:
- தொடக்கப்பள்ளி (Primary): ₹1000
- நடுநிலைப்பள்ளி (Middle): ₹1500
- உயர் நிலை பள்ளி (High): ₹2250
- உயர்நிலைப்பள்ளி (Hr. Sec): ₹3,000
இது முறையான சுத்தம் மற்றும் சுகாதார பொருட்களுக்கே போதாத தொகை.
💦 RO குடிநீர் சுத்திகரிப்பு:
அரசு தரப்பில் RO நீர் சுத்திகரிப்புக்கு முன்னெடுப்போ, நிதியுதவியோ இல்லை. பெரும்பாலும் இது CSR, நன்கொடையாளர்கள் மற்றும் NGO க்களின் ஆதரவில் மட்டுமே அமைகிறது.
"தூய்மை கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் ஆடம்பரமல்ல – அவை குழந்தைகளின் நல வாழ்வுக்கு அடித்தளம்."
அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிவறை வசதி உறுதி செய்ய, அரசு பள்ளிகளுடன் இணைந்து கல்வி மரம் அறக்கட்டளை பணியாற்றுகிறது
0 Comments