”நாம் என்ன செய்ய முடியும்?” — Care4Schools

2022 ஆம் ஆண்டு, ஒரு தனிப்பட்ட இழப்பு, எனக்கு ஒரு பெரிய விழிப்புணர்வாக மாறியது.

என் உறவினர் ஒருவர், இளம் வயதிலேயே சிறுநீரக செயலிழப்பு(Kidney failure) காரணமாக உயிரிழந்தார். அந்த இறுதிச்சடங்கிற்காக நான் என் சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். அன்றைய தினம், அலுவலக வேலையை அங்கிருந்து செய்து கொண்டிருந்தேன்.

மதிய உணவு இடைவெளியில், டாக்டர் ஆனந்த் அவர்கள் வெளியிட்ட ஒரு பதிவு என் கண்களில் பட்டது.
அது — ஒரு அரசு பள்ளி மாணவியின் கதை.
கழிவறை சுத்தமில்லாததால், தண்ணீர் குடிக்காமல் இருந்ததால், சிறுநீரக தொற்றால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.

அந்த ஒரு பதிவு… என்னை உலுக்கியது.


அதே நாளில்,
“நம்ம ஊர் பள்ளிகளில் நிலைமை எப்படி இருக்கிறது?”
என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

அருகிலுள்ள ஒரு அரசு பள்ளிக்குச் சென்றேன்.

அங்கே நான் பார்த்தது — நான் நினைத்ததை விட மோசமானது.
சுத்தமில்லாத கழிவறைகள்.
பராமரிக்கப்படாத குடிநீர் வசதிகள்.

அதிர்ச்சியோடு வீடு திரும்பினேன்.

அதை என் தங்கையிடம் பகிர்ந்தேன்.
அவள் அமைதியாக கேட்டாள்…
பெண் குழந்தைகள் சந்திக்கும் சிரமங்களை விரிவாகச் சொன்னாள்.

அரசு, மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய
“Water Bell” போன்ற முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அவள் சொன்ன ஒரு உண்மை என்னை மேலும் பதறச் செய்தது:

2004 சுனாமிக்குப் பிறகு,
காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரின் தரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனால், சிறுநீரக சம்பந்தமான நோய்கள் அதிகரித்து,
சிறு நகரங்களில்கூட டயாலிசிஸ் மையங்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

📌 இதைப் பற்றிய விரிவான தகவல்:

https://www.indiawaterportal.org/water-quality-and-pollution/pollution/fast-drying-cauvery-delta-tipping-point

பின்னர் ஒரு கேள்வி கேட்டாள்:

“நாம் என்ன செய்ய முடியும்?”


அந்த ஒரு கேள்வி…
என்னை இரண்டு நாட்கள் தூங்க விடவில்லை.


பதில் தேட ஆரம்பித்தேன்.

அரசுத் திட்டங்கள் என்ன?
நிதி எவ்வளவு?
எப்படி பராமரிக்கப்படுகிறது?
எங்கே சிக்கல்கள் இருக்கின்றன?
தூய்மை பணியாளர்களின் நிலை என்ன?

இரண்டு வாரங்கள் — முழுவதும் இதற்காகவே செலவிட்டேன்.
அதிகாரிகள், நண்பர்கள், பலரிடம் பேசினேன்.

இறுதியில் ஒரு உண்மை தெளிவாக புரிந்தது:

நிதி ஒதுக்கீடு மட்டுமல்ல,
தொடர்ச்சியான கண்காணிப்பும், முறையான பராமரிப்பும் —
இவைதான் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் முக்கிய காரணிகள்.


மீண்டும் என் தங்கையிடம் சொன்னேன்.

அவள் மீண்டும் கேட்டாள்:
“நம்மால் என்ன பண்ண முடியும்?”


அந்த கேள்விக்கான முதல் பதில் — செயல்.

அரசு பள்ளியில் படித்து, அரசின் திட்டங்களால் பயன்பெற்ற நாங்கள்,  அரசு பள்ளிகளுக்கு திருப்பி செய்வதை, கடமையாக  உணர்ந்தோம்.

எனது கிராமத்தில் இருந்த 3 அரசு பள்ளிகளை தத்தெடுத்தோம்.
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடியாக பேசி தேவைகளை புரிந்துகொண்டோம்.

  • கழிவறை சுத்தமாக பராமரிக்க, அரசு வழங்கும் நிதிக்கு கூடுதலாக மாதாந்திர ஆதரவு வழங்கினோம்
  • RO Water Purifiers நிறுவினோம் (RO Water Purifiers நிறுவவும், தொடர்ந்து பராமரிக்கவும் அரசு அளவில் தனியான திட்டம் இல்லாத ஒரு முக்கிய குறையை நிரப்பும் முயற்சி இது)

சிறிய தொடக்கம்… ஆனால் பெரிய மாற்றம்.


சில மாதங்களில், அருகிலுள்ள பள்ளிகளில் இருந்து கோரிக்கைகள் வரத் தொடங்கின.

“எங்களுக்கும் உதவுங்கள்…”


ஒரு நாள்,
ஒரு பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு என்னை அழைத்தார்கள்.

அங்கு ஒரு பெற்றோர்…
என் கைகளை இறுக்கமாகப் பிடித்து…
சுமார் ஐந்து நிமிடங்கள் நன்றி கூறினார்.

அந்த நொடியில் எனக்கு, ஒன்று தெளிவாக புரிந்தது:

இது ஒரு சாதாரண தொடக்கம் அல்ல.
இது தொடர வேண்டிய ஒரு பொறுப்பு.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னும் இந்த அடிப்படை வசதிகளை எதிர்பார்த்து உள்ளனர்.
அதை உணர்ந்த அந்த தருணத்தில்,
இது ஒருவரால் செய்யக்கூடிய செயல் அல்ல —

ஒரு குழுவாக இணைந்து செய்ய வேண்டிய இயக்கம் என்பதை புரிந்துகொண்டேன். 


நண்பர்களிடம் பகிர்ந்தேன்.
அவர்கள் உடனே இணைந்தார்கள்.


2025–2026 கல்வியாண்டில், கல்வி மரம் அறக்கட்டளையின்
“நலமுடன் நமது பள்ளி” முயற்சியின் கீழ்:

✔️ 52 அரசு பள்ளிகள்.
✔️ 55 RO Water Purifiers நிறுவினோம்.
✔️ 6900+  மாணவர்கள் தினமும்  பயன்பெறுகிறார்கள்.
✔️ தொடர்ந்து கண்காணிப்பு & பராமரிப்பு செய்தோம்.


அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் —
அனைவரிடமிருந்தும் கிடைத்த ஆதரவு…
எங்களுக்குப் பெரிய உற்சாகம்.


இந்த முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவிய
நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள்,
கல்வி மரம் குடும்பம், நண்பர்கள்,
மற்றும் Technical Partners அனைவருக்கும்
எங்களது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.


இது தொடக்கம் மட்டுமே.


அடுத்த இலக்கு:

2026–2027 கல்வியாண்டில்,
“Care4Schools” முயற்சியின் மூலம்
200 அரசு பள்ளிகளை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளோம்.


அந்த ஒரு கேள்வி இன்னும் எங்களை முன்னோக்கி நகர்த்துகிறது:

“நாம் என்ன செய்ய முடியும்?”



Support Our Mission. Make Every Drop Count 💧

Your contribution helps us bring safe drinking water & clean sanitation to more government schools across Tamil Nadu.

🙏 Donate via UPI: kalvimaram@sbi

Every contribution — big or small — creates real impact.



Transforming TN Schools—Now Just a Message Away! 📲 Kalvi Maram Foundation introduces the Care4Schools WhatsApp Bot . We’ve made it easier than ever to bring safe water and hygiene support to government schools in need. 🔗 Click to Chat: wa.me/917357354545 📞 Save us: +91 735 735 4545 🌐 Visit: care4schools.org

Post a Comment

0 Comments